ஜி-20 நாடுகளின் தலைமை பதவியை இந்தியா ஏற்றிருப்பது, நாட்டின் பலத்தை உலகம் முழுவதும் வெளிப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக நேற்று டெல்லியில் இடம்பெற்ற அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் தலைமையேற்று உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜி20 உச்சி மாநாட்டிற்கான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒத்துழைப்பு அவசியம் எனவும் இதன்போது அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், இந்த மாநாட்டின் மூலம், வழக்கமான பெரிய பெருநகரங்களுக்கு அப்பால் இந்தியாவின் சில குறிப்பிட்ட பகுதிகளை உலகிற்கு காட்சிபடுத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
சர்வதேச அளவில் வலுவான கூட்டமைப்பாக கருதப்படும் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9, 10ஆம் திகதிகளில் இந்தியாவில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது