ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் நடைபெறவுள்ள சர்வகட்சி கூட்டத்தில் தமது கூட்டமைப்பு பங்கேற்காது என உத்தர லங்கா கூட்டமைப்பின் உப தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வுக்காக அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்திருந்தார்.
இதற்கமைய அமைய இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.