10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
இன்று(செவ்வாய்கிழமை) முதல் அமலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத் துறைக்கான பானங்கள், MDF தளபாடங்கள், பாதுகாப்பு நோக்கங்களுக்காக CCTV மற்றும் விளையாட்டு துறை அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்கள் என்பன இதில் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.