அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை உக்ரைன் ஜனாதிபதி இன்று(புதன்கிழமை) நேரில் சந்தித்து பேசவுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஓராண்டை நெருங்கி வருகிறது.
பகுதிகளைக் கைப்பற்ற ரஷ்யா தீவிரமாக போரிட்டு வரும் நிலையில் உக்ரைனும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ரஷியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
உக்ரைனில் தங்களால் இணைத்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டும், அந்த நாட்டுப் படையினரின் வசம் இன்னும் இருக்கும் பகுதிகளைக் கைப்பற்றுவதில் கடும் சிக்கல் நிலவி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளாா்.
இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி, அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று வொஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை நேரில் சந்தித்து பேசவுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.