அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு கணக்கை இந்திய தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.
அதிமுகவில் இரட்டைத் தலைமை பிரச்னை ஏற்பட்டதை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கட்சியின் உரிமை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததை அடுத்து, பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு தற்போது நடைபெற்று வருகின்றது.
மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொதுக்குழு தீர்மானங்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்பிக்கப்பட்ட நிலையில், தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளக்கூடாது என ஓபிஎஸ் தரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஒக்டோபர் 3-ஆம் திகதி இடைக்கால பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி முன்வைத்த அதிமுக வரவு செலவு கணக்கை இந்திய தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.