அடுத்த ஆண்டின் இந்திய பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் தற்போது கொச்சினில் நடைபெற்று வருகின்றது.
இதில் 87 இடங்களுக்காக 404 வீரர்கள் போட்டியிடவுள்ளனர். ஏலத்தில் வீரர்களை வாங்கும் பத்து அணிகளிலும் 30 வெளிநாட்டு வீரர்களுக்கே இடம் உள்ளது.
எனினும், 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் இணை அங்கத்துவ நாடுகளின் நான்கு வீரர்கள் இன்றைய ஏலத்தில் போட்டியிடுகின்றனர்.
முதற்கட்ட துடுப்பாட்ட வீரர்கள் ஏலத்தில், நியூஸிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சனை குஜராத் டைடன்ஸ் அணி இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
இங்கிலாந்தின் ஹரி புரூக்கை இந்திய மதிப்பில் 13.25 கோடி ரூபாய்க்கு சன்ரைசஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது.
இந்தியாவின் மாயங் அகர்வாலை இந்திய மதிப்பில் 8.25 கோடி ரூபாய்க்கு சன்ரைசஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது.
இந்தியக் கிரிக்கெட் அணியின் அஜிங்கியா ரஹானவை இந்திய மதிப்பில் 50 இலட்சம் ரூபாய்க்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் தென்னாபிரிக்காவின் ரிலே ரொசவ் ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை.
சகலதுறை வீரர்கள் ஏலத்தில், இங்கிலாந்தின் சகலதுறை வீரரான சேம் கர்ரனை இந்திய மதிப்பில் 18.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி, ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் ஏலத்தில் இதுவரை வீரரொருவர் வாங்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரரான ஜேஸன் ஹோல்டரை 5.75 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ஹோயல்ஸ் அணி வாங்கியது.
பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரரான சகிப் அல் ஹசனை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரரானஒடியன் ஸ்மித்தை இந்திய மதிப்பில் 50 இலட்சம் ரூபாய்க்கு குஜராத் டைடன்ஸ் அணியும் சிம்பாப்வேயின் சகலதுறை வீரரான சிகண்டர் ரஸாவை 50 இலட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தன.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான கேமரூன் கிறீனை 17.5 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸை, 16.25 கோடி ரூபாய்க்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.
விக்கெட் காப்பாளர்களுக்கான ஏலத்தில், பங்களாதேஷ் அணியின் லிடொன் தாஸை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
மேற்கிந்திய தீவுகள் அணியின் நிக்கோலஸ் பூரானை, லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி 16 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது.
தென்னாபிரிக்காவின் ஹென்ரிச் க்ளொசனை டெல்லி கெபிடல்ஸ் அணி 1.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கியது.
இலங்கை கிரிக்கெட் அணியின் குசல் மெண்டிசை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
இங்கிலாந்தின் பிலிப் சோல்ட்டை 2 கோடி ரூபாய்க்கு டெல்லி கெபிடல்ஸ் அணி, ஏலத்தில் எடுத்தது.
பந்து வீச்சாளர்களுக்கான ஏலத்தில், இங்கிலாந்தின் கிறிஸ் ஜோர்தனை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் ரீஸ் டொப்லேவை, 1.9 கோடி ரூபாய்க்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது.
இந்தியக் கிரிக்கெட் அணியின் இசாந்த் சர்மாவை, 50 இலட்சம் ரூபாய்க்கு டெல்லி கெபிடல்ஸ் அணி வாங்கியது.
இங்கிலாந்தின் அடில் ராஷித்தை 2 கோடி ரூபாய்க்கு சன்ரைசஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.
இந்தியாவின் மாயங் மார்கண்டாவை 50 இலட்சம் ரூபாய்க்கு சன்ரைசஸ் ஹைதராபாத் அணி வாங்கியது.
நியூஸிலாந்தின் ஆடம் மில்ன், இந்தியாவின் ஜெய்தேவ் உனட்கட், அவுஸ்ரேலியாவின் ஆடம் ஸம்பா, மேற்கிந்திய தீவுகளின் அகீல் ஹொசைன், தென்னாபிரிக்காவின் டப்ரைஸ் சம்ஸி, ஆப்கானிஸ்தானின் முஜிப் உர் ரஹ்மான் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
சர்வதேச கிரிக்கெட் அறிமுகம் பெறாத சகலதுறை வீரர்களுக்கான ஏலத்தில், விவ்ராந்த் சர்மாவை 2.6 கோடி ரூபாய்க்கும், சமர்த் வியாஸ் மற்றும் சன்வீர் சிங்கை தலா 20 இலட்சம் ரூபாய்க்கும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது.
நிஷாந்த் சிந்துசை 60 இலட்சம் ரூபாய்க்கு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
சர்வதேச கிரிக்கெட் அறிமுகம் பெறாத விக்கெட் காப்பாளர்களுக்கான ஏலத்தில், நடராஜன் ஜெகதீசனை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 90 இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
கே.எஸ் பாரத்தை குஜராத் டைடன்ஸ் அணி, 1.2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
உபேந்திர சிங் யாதவ்வை சன்ரைசரஸ் ஹைதராபாத் அணி, 25 இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
சர்வதேச கிரிக்கெட் அறிமுகம் பெறாத வேக்பந்து வீச்சாளர்களுக்கான ஏலத்தில், வைபவ் அரோராவை 60 இலட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வாங்கியது.
யாஷ் தாகூரை 45 இலட்சம் ரூபாய்க்கு லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி வாங்கியது.
சிவம் மாவியை 6 கோடி ரூபாய்க்கு குஜராத் டைடன்ஸ் அணி வாங்கியது.
முகேஷ் குமாரை 5.5 கோடி ரூபாய்க்கு டெல்லி கெபிடல்ஸ் அணி வாங்கியது.
சர்வதேச கிரிக்கெட் அறிமுகம் பெறாத சுழற்பந்து வீச்சாளர்களுக்கான ஏலத்தில், ஹிமான்ஷு சர்மாவை 20 இலட்சம் ரூபாய்க்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது.
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான துடுப்பாட்ட வீரர்களுக்கான ஏலத்தில், இங்கிலாந்தின் வில் ஜெக்ஸ்சை 3.2 கோடி ரூபாய்க்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது.
இந்தியக் கிரிக்கெட் அணியின் மணிஷ் பாண்டேவை, 2.4 கோடி ரூபாய்க்கு டெல்லி கெபிடல்ஸ் அணி வாங்கியது.
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பந்து வீச்சாளர்களுக்கான ஏலத்தில், நியூஸிலாந்தின் கெய்ல் ஜேமீஸனை, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 1 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சகலதுறை வீரர்களுக்கான ஏலத்தில், மேற்கிந்திய தீவுகள் அணியின் ரொமாறிசோ செப்பர்ட்டை 50 இலட்சம் ரூபாய்க்கும், அவுஸ்ரேலியாவின் டேனியல் சேம்சை 75 இலட்சம் ரூபாய்க்கும், லக்னொவ் சுப்பர் ஜியண்ட்ஸ் அணி வாங்கியது.