பிரான்ஸின் மத்திய பரிஸில் ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.
தாக்குதல் நடத்தியவர் குர்திஷ் கலாச்சார மையத்தை குறிவைத்து உள்ளூர் சமூகத்தை சேர்ந்தவர்களை சுட்டுக் கொன்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
69 வயதான ஒரு சந்தேக நபர் உடனடியாக கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதலை அடுத்து சம்பவ இடத்தில் கூடியிருந்த பொலிஸாருக்கும் குழுவினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
மக்கள் நடுத்தெருவில் தீ மூட்டுவதையும், கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்குவதையும், கலவரத்தில் இருந்த அதிகாரிகள் கண்ணீர்ப்புகை வீசி பதிலடி கொடுத்ததையும் காணொளி காட்சிகள் காட்டுகின்றன.
காயமடைந்த மூவரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், மற்றவர்கள் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான உறுதியான நோக்கம் எதுவும் இல்லை, ஆனால் பரிஸ் வழக்கறிஞர் லாரே பெக்குவா, சந்தேக நபர் முன்பு இனவெறி வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறினார்.
அந்த சம்பவம் – அவர் பாரிஸில் குடியேறியவர்கள் முகாமில் கூடாரங்களை வாளால் தாக்கியது – 8 டிசம்பர் 2021 அன்று பெர்சியில் நடந்தது. அவர் ஏன் சமீபத்தில் விடுவிக்கப்பட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இறுதியில் எதிர்ப்பின்றி சந்தேக நபரை தடுத்து வைத்த பொலிசார் தாக்குதலுக்கு பயன்படுத்திய ஆயுதத்தை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்குரைஞர்கள் கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தனர்.
தாக்கப்பட்ட அஹ்மத்-காயா குர்திஷ் மையத்தை நடத்தும் பிரான்சில் உள்ள குர்திஷ் ஜனநாயக கவுன்சில் தாக்குதலைக் கண்டித்தது. பரிஸில் வாழும் குர்துக்களைப் பாதுகாக்க பிரான்ஸ் அதிகாரிகள் மீண்டும் ஒருமுறை தவறிவிட்டனர் என அறிக்கையொன்றில் தெரிவித்தது.
தேசியவாத குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின்இணை நிறுவனர் உட்பட, மூன்று குர்திஷ் பெண் ஆர்வலர்கள், கடந்த 2003ஆம் ஆண்டு ஜனவரி பரிஸில் கொல்லப்பட்டு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.