நத்தார்,புதுவருட பண்டிகைகளை முன்னிட்டு மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் தற்காலிக பண்டிகைக்கால வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
அந்த நிலையில் உள்ளூர் மற்றும் தென் பகுதி வியாபாரிகள் இடத்தை குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வியாபார நடவடிக்கைகள் 20ஆம் திகதி முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொதுப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மன்னார் நகர் பகுதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மன்னார் நகரசபைக்கு பண்டிகைக்கால வியாபார நிலையங்கள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமையினால் ஒரு கோடியே 42 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.