முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (திங்கட்கிழமை) இவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஈ.கே.- 649 என்ற விமானம் மூலம் அதிகாலை 02.55 க்கு பயணமாகியுள்ளனர்.
இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மனைவி அயோமா ராஜபக்ஷ, மருமகள் செவ்வந்தி ராஜபக்ஷ, மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் பேரக் குழந்தைகள் ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.