குளிர்கால புயல் வட அமெரிக்காவை தொடர்ந்து தாக்கிவரும் நிலையில், மேற்கு நியூயோர்க் மாநிலத்தில் குறைந்தது 28பேர் உயிரிழந்துள்ளனர்.
அநேகமாக இரண்டு நாட்களுக்கும் மேலாக மிக மோசமான புயலில், கார்களில் சிக்கியுள்ளதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்கிழமை வரை மாநிலத்தின் சில பகுதிகளில் மேலும் ஒன்பது அங்குலங்கள் (23 செமீ) வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
கனடா முதல் மெக்ஸிகோ எல்லை வரை நீடித்து வரும் புயல் காரணமாக 56பேர் உயிரிழந்துள்ளனர்.
நியூயோர்க் மாநிலத்திற்கு கூட்டாட்சி ஆதரவை அனுமதிக்கும் அவசரகால பிரகடனத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்தார்.
மேலும், பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த விடுமுறை வார இறுதியில் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் என் இதயம் உள்ளது’ என்று அவர் டுவீட் செய்துள்ளார்.