புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து கொண்டே, தங்களது சொந்த தொகுதியில் வாக்குகளை பதிவு செய்யும் வகையில், தொலையியக்கி (ரிமோட்) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.
இந்த புதிய சாதனத்தின் மூலம், ஒரே சாவடியில் இருந்து அதிகபட்சம் 72 தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள், தங்களது தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்கை பதிவு செய்ய முடியும்.
இதை செயற்பாட்டுக்கு கொண்டு வருவதில் இருக்கும் சவால்கள் குறித்து கருத்து தெரிவிக்கும்படியும், ஜனவரி 16ஆம் திகதி நடைபெறவுள்ள செயல்முறை விளக்கத்தில் கலந்து கொள்ளும்படியும் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.