வீதி விபத்துக்களை குறைக்கம் முகமாக பொலிசாரினால் விசேட நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படிருந்தது.
இன்று (சனிக்கிழமை) வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது விபத்துக்களை குறைக்கும் முகமாக கனரக வாகனங்கள், பாரவூர்திகள் மற்றும் துவிச்சக்கரவண்டி போன்றவற்றிற்கு மின்னொளி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
குறித்த நடவடிக்கையில் பொலிஸ் அதிகாரிகள், சீன அரச கூட்டுத்தாபனத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.