மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருவிழா மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (சனிக்கிழமை) இரவு 11.45 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன்போது திருப்பலியின் ஆலயத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பை வழங்கியிருந்தனர்.
மேலும் குறித்த திருப்பலியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.