அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் மீள ஆரம்பமாகியுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இன்று முதல் ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இதற்கமைய நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை காரணமாக மூன்றாம் தவணைக்காக ஜனவரி மாதம் 21ஆம் திகதி முதல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.