நத்தார் மற்றும் புதுவருட கொண்டாட்டத்திற்காக தமது சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் தாங்கள் பணியாற்றும் இடங்களுக்குத் திரும்புவதற்கு வசதியாக விசேட பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துக்களே சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அறிவிப்பதற்கு வசதியாக 1955 அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.