மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிரான பல்வேறு தரப்பினர் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.
இதேவேளை போராட்டங்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பில், சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடமில்லை என்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம் எனவும், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் செயற்பட வேண்டாம் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது.