ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி. மகேஸ்வரனின் 15வது ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வட்டுக்கோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன் போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்தும் , மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் வட்டுக்கோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் விஜிமருதன், மதகுருமார், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி கொழும்பில் பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் வைத்து முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரனும் அவரது பாதுகாவலரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.