2023ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு பல மாவட்டங்களில் ஆரம்பமாகியுள்ளது.
அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பி.ஏ. சரத்சந்திரவினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டு இராணுவ வீரர்கள் மற்றும் நாட்டுக்காக உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்து இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து புதுவருட சத்தியபிரமாணத்தை அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் செய்து கொண்டதுடன், புதுவருட வாழ்த்துக்களையும் பரிமாறி தமது கடமைகளை பொறுப்பேற்றிருந்தனர்.
குறித்த நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், அரச அதிகாரிகள், இரானுவ தளபதி, கடற்படை தளபதி, அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.