தேர்தலுக்காக ஒதுக்கப்படும் நிதியை விவசாயத்துறை அமைச்சிற்கு வழங்குமாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன் மூலம் விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய முடியும் என்றும் இதனால் விவசாயிகளின் பிரச்சினைகள் குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.
நிதி நெருக்கடியின் காரணமாக கடந்த அறுவடையின் போது விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறிருப்பினும் இம்முறை சிக்கல்கள் ஏற்படாத வகையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
எனவே நெல் கொள்வனவிற்கு முன்னுரிமையளித்து, ஓரிரு மாதங்களுக்கு தேர்தலை காலம் தாழ்த்துவது ஏற்ற தீர்மானம் என்றும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.