மட்டக்களப்பு கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக இன்று பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடதுடன் அங்கு நடப்பட்ட பெயர்ப்பலகை மற்றும் மரக்கன்றுகளும் பிடுங்கியெறியப்பட்டன.
மாவீர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழுவின் தலைவர் லவக்குமார் தலைமையில் இன்று காலை தரவையில் இந்த கண்டனம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தரவை மாவீரர் துயிலும் இல்லமானது மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதானமான மாவீரர் துயிலும் இல்லமாக கருதப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தினை ஆக்கிரமிக்கும் நோக்குடன் இராணுவமும் அரச புலானாய்வு துறையும் இணைந்து மரநடுகை என்ற போர்வையில் இந்த ஆக்கிரமிப்பை மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு, அதற்குஎதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இராணுவத்தினரால் நடப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டு வன இலாக தினைக்களத்தின் புதிதாக பெயர் பலகை இடப்பட்ட நிலையில் போராட்டக்காரர்களால் இன்று அந்த பெயர்ப்பலகையும் உடைத்தெறியப்பட்டுள்ளதுடன் அங்கு நடப்பட்ட மரக்கன்றுகளும் பிடுங்கியெறியப்பட்டன.
குறித்த மாவீர் துயிலும் இல்லத்தினை அபகரிப்பதற்கு எதிராகபாரிய ஆர்ப்பட்டம் முன்னெடுக்கபட்டதுடன் குறித்த மாவீரர் துயிலும் இல்ல த்தினை மக்களிடம் வழங்க கோரியும், இராணுத்தினரை பிரதேசத்தில் இருக்கு வெளியேறுமாறு கோசங்கள் எழுப்பப்பட்டன.