சீன நிலப்பரப்பில் இருந்து நிதி மையத்தை தனிமைப்படுத்திய மூன்று வருட தொற்றுநோய் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் சீனா, ஹொங்காங்குடனான தனது எல்லையை ஞாயிற்றுக்கிழமை திறக்கும் என்று அறிவித்துள்ளது.
சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு பயணிக்கும் ஹொங்கொங் குடியிருப்பாளர்கள், தனிமைப்படுத்தப்படவோ அல்லது கொவிட் சோதனைக்கு உட்படுத்தவோ தேவையில்லை என்று சீனாவின் ஹொங்கொங் மற்றும் மக்காவ் விவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.
பார்வையாளர்கள் பயணத்திற்கு முந்தைய 48 மணிநேரத்திற்குள் கொவிட் பரிசோதனையின் எதிர்மறையான முடிவை வழங்க வேண்டும் மற்றும் சுகாதார அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
பிரதான நிலப்பகுதிகளில் வசிப்பவர்கள் ஹொங்கொங்கிற்குச் செல்வதற்கான பயண மற்றும் வணிக விசாக்களை வழங்குவதை சீனா மீண்டும் தொடங்கும்.
அரசாங்க தரவுகளின்படி, தொற்றுநோய்க்கு முன்னர் 236 மில்லியனுக்கும் அதிகமான பயணங்கள் எல்லையில் மேற்கொள்ளப்பட்டன.
சீனா தனது சர்வதேச எல்லைகளை மீண்டும் திறப்பதாகவும், ஜனவரி 8ஆம் திகதி முதல் கட்டாய தனிமைப்படுத்தலை இரத்து செய்வதாகவும் கூறியதை அடுத்து இந்த நடவடிக்கைகள் வந்துள்ளன.