தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று ஆரம்பமான இந்த மாநாட்டில், நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் மாநாட்டில், பிரதமர் மோடி, தலைமைச் செயலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
கடந்தாண்டு ஜூன் மாதம் பஞ்சாபில் முதல் மாநாடு நடத்தப்பட்டநிலையில், இரண்டாவது முறையாக டெல்லியில் நடைபெறும் இந்த மாநாட்டில், மத்திய அரசு அதிகாரிகள், மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், ஒன்றிய பிரதேசங்களின் அதிகாரிகள் என மொத்தம் 200 பேர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மூன்று நாட்கள் மாநாட்டில் மாநிலங்களுடன் இணைந்து பொருளாதார வளர்சியை அடைவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
மேலும், ஜி-20 மாநாட்டில் மாநிலங்களின் பங்குகள், சிறு, குறு வர்த்தகங்கள், உள்கட்டமைப்பு, முதலீடுகள், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதிக்கப்படவுள்ளது.
மத்திய அரசு – மாநில அரசுகளுக்கு இடையேயான கூட்டாட்சியை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாடு நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.