பாதாள உலக தலைவரான சொத்தி உபாலியின் மகன் சஜித் ரந்திகவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொரளை, மானிங் டவுன் பகுதியில் வைத்து 09 கிராம் ஹெரோயின், வாள்கள் மற்றும் 04 கத்திகளுடன் நேற்று (புதன்கிழமை) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கூரிய ஆயுதங்களால் மக்களை தாக்கிய பல சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபராக இவர் தேடப்பட்டு வந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் தற்போது இறந்துபோன ‘சொத்தி உபாலி’ எனப்படும் பிரபல பாதாள உலக பிரமுகர் மற்றும் அவரது முதல் மனைவியின் மகன் என கூறப்படுகிறது.