ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது பாதுகாப்பு அமைச்சருக்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உக்ரைன் போர்முனையில் 36 மணி நேர போர் நிறுத்தத்தை அமுல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
மாஸ்கோ நேரப்படி 12:00 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்ட போர்நிறுத்தம், ரஷ்ய மரபுவழி கிறிஸ்மஸ் உடன் ஒத்துப்போகும்.
ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச் ஜூலியன் நாட்காட்டியின்படி ஜனவரி 7ஆம் திகதி கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடுகிறது.
கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கிரிலின் முறையீட்டைக் கருத்தில் கொண்டு, 36 மணி நேர காலத்திற்கு உக்ரைனில் உள்ள முழுத் தொடர்பிலும் போர்நிறுத்த ஆட்சியை விதிக்குமாறு ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சருக்கு ஜனாதிபதி இதன் மூலம் அறிவுறுத்துகிறார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தனது இரவு காணொளி உரையில், ‘கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தில் உக்ரைனிய முன்னேற்றங்களை நிறுத்துவதற்கும் அதிகமான ஆட்களையும் உபகரணங்களையும் கொண்டு வருவதற்கும் போர் நிறுத்தத்தை ஒரு மறைப்பாக பயன்படுத்த ரஷ்யா விரும்புவதாக’ கூறினார்.