உத்தேசித்துள்ள சம்பளம் ஈட்டும்போது வரி திருத்தங்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்தால் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக வைத்தியர்கள், வங்கியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளன.
புதிய வரித் திட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்தினால் நாளை மறுதினம்(ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக பல தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டின் நலனுக்காக உழைக்கும் தொழில் வல்லுநர்களுக்கு உத்தேச வரிகள் நியாயமற்றவை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, அரச ஊழியர்களால் பெறப்படும் கடனுக்கான வட்டி வீதத்தை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி எடுத்த தீர்மானத்திற்கு எதிராக, இலங்கை நிதாஹஸ் சேவக சங்கமயாவுடன் இணைந்த சுகாதாரத் துறை ஊழியர்கள் ஜனவரி 9ஆம் திகதி சுகயீன விடுமுறையில் செல்ல தீர்மானித்துள்ளனர்.