எவ்வித நெருக்கடி ஏற்பட்டாலும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான பணத்தை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சித் தேர்தலுக்கு என மதிப்பிடப்பட்ட தொகையை விடக் குறைவான செலவில் தேர்தலை நடத்தி முடிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தலை கடந்த 4 ஆம் திகதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டது.
அதன்படி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18 முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.