எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நாடளாவிய ரீதியில் தனித்து போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு சில உள்ளூராட்சி சபைகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவித்த அவர் அவ்வாறு இல்லாத உள்ளூராட்சி சபைகளில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் திறமையான புதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதோடு தற்போது வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.