மின் கட்டண திருத்தம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு இன்று(திங்கட்கிழமை) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் தமது கருத்துக்களை சமர்ப்பிக்க அமைச்சர்களுக்கு ஒருவார கால அவகாசம் வழங்கப்பட்டது.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது அந்த கருத்துக்களை பரிசீலித்ததன் பின்னர் மின் கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
எதிர்பார்த்தபடி மின்சார கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பு கிடைத்தால் மற்றும் நிலக்கரி மற்றும் எரிபொருள் ஆலைகளுக்கு உரிய உள்ளீடுகள் கிடைத்தால், எதிர்வரும் காலங்களில் மின் வெட்டுக்கள் இன்றி மின்சாரத்தை வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.