பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், தென்னாபிரிக்காவில் நாளை (செவ்வாய்க்கிழமை) எஸ்ஏ-20 என்ற முதல் ரி-20 கிரிக்கெட் லீக் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
எம்.ஐ கேப் டவுன், பார்ல் றோயல்ஸ், டர்பன் சுப்பர் ஜெயன்ட்ஸ், ஜோபர்க் சுப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப், பிரிட்டோரியா கெபிடல்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் இந்த தொடரில் கலந்து கொள்கின்றன.
நாளை கேப் டவுனில் ஆரம்பமாகும் முதல் லீக் போட்டியில், ரஷித் கான் தலைமையிலான எம்.ஐ கேப் டவுன் அணியும் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த லீக் தொடரில் மொத்தம் 33 போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆரம்ப பிரிவில் ஒவ்வொரு அணியும் தலா 2 முறை மோதும். அதன்பின்னர் புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
பெப்ரவரி 8ஆம் திகதி ஜோஹன்னஸ்பர்க்கில் முதல் அரையிறுதியும், 9ஆம் திகதி செஞ்சுரியனில் இரண்டாம் அரையிறுதியும், பெப்ரவரி 11ஆம் திகதி ஜோஹன்னஸ்பர்க்கில் இறுதி போட்டியும் நடைபெறவுள்ளன.
இந்த தொடரில், கேப் டவுன், டர்பன், ஜிபெர்ஹா, பார்ல், செஞ்சுரியன், ஜோஹன்னஸ்பர்க் உள்ளிட்ட 6 நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.