அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில், முதல்முறையாக, உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரரான அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ் நோவக் ஜோகோவிச் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
செர்பியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச், தரவரிசைப் படுத்தப்படாத அமெரிக்க வீரரான செபாஸ்டியன் கோர்டாவை எதிர்கொண்டார்.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், ஜோகோவிச் 6-7(8), 7-6(3), 6-4 என்ற செட்கள் கணக்கில் மூன்று மணி நேரம் ஒன்பது நிமிடங்கள் போராடி வெற்றியை பதிவுசெய்தார்.
21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச், எதிர்வரும் அவுஸ்ரேலியா பகிரங்க டென்னிஸ் தொடரில் பங்கேற்கவுள்ளார். அவர் தனது அவுஸ்ரேலியா பகிரங்க டென்னிஸில் 10ஆவது பட்டத்தை இலக்காகக் கொண்டுள்ளார், இது 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் என்ற நடாலின் சாதனையை சமன் செய்யும்.