கொழும்பை சுற்றியுள்ள பல பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
களனி, களுத்துறை, பாணந்துறை, நுகேகொட உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கும் இவர்கள் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஹசிஸ் போதைப் பொருட்களை விநியோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட போது, 7 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் கொட்டாஞ்சேனை, வத்தளை மற்றும் திக் ஓயா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.