திறைசேரி தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.