தெற்கு பெருவில் முன்கூட்டியே தேர்தல் நடத்த கோரியும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவை விடுதலை செய்யக்கோரியும் நடைபெற்ற போராட்டங்களை அடுத்து ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது 17பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலியாக்கா நகரில், எதிர்ப்பாளர்கள் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றதில் உயிரிழந்தவர்களில் இரண்டு இளைஞர்களும் உள்ளடங்குவதாக அந்நாட்டின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனங்களின்படி, அருகிலுள்ள நகரமான சுகுய்டோவில் எதிர்ப்பாளர்கள் நெடுஞ்சாலையைத் தடுத்த போது ஏற்பட்ட மோதலில், மற்றொரு நபர் உயிரிழந்தார்.
சொந்தக் குற்றச்சாட்டுகளைத் தடுக்கும் முயற்சியாக காஸ்டிலோ காங்கிரஸைக் கலைக்க உத்தவிரவிட்டபோது, அவரது பதவி பறிக்கப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து டிசம்பர் தொடக்கத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. அமைதியின்மை தொடங்கியதில் இருந்து அதிக இறப்பு எண்ணிக்கை இதுவாகும். கிளர்ச்சி குற்றச்சாட்டின் பேரில் காஸ்டிலோ 18 மாதங்கள் விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவலில் உள்ளார். ஆனால் அவர் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்.
நாடளாவிய ரீதியில், திங்களன்று பெருவின் 13 சதவீத மாகாணங்களில் போராட்டங்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் பல வீதித் தடைகளை உள்ளடக்கியதால், டிரக்கர்களால் விளைபொருட்களை சந்தைக்கு வழங்க இயலாது போனது குறிப்பிடத்தக்கது.