தமிழ் மக்களுக்கான நல்லெண்ணத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் செய்ற்பாடாக அரசியல் கைதிகளை விடுதலை செய்யப்படுவதுடன், காணி பிரச்சினைகளுக்கும் காத்திரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சந்திப்பிலேயே இந்த விடயத்தை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்,
அத்தோடு,அரசியல் பிரச்சினைகளைப் பொறுத்த வரைசயில் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை 3 கட்டங்களாக முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.