தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (புதன்கிழமை) தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் கண்காணிப்பாளர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தும் முதல் சுற்று கலந்துரையாடல் இதுவாகும்.
இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலை இடைநிறுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் இடைத்தரகர்களாக செயற்பட தேர்தல் கண்காணிப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
18ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி மதியம் வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.