பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
இன்று(புதன்கிழமை) அதிகாலை 12 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழுவினர் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது அவர் பல்வேறு முக்கியஸ்தர்களை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.