கட்டுப்பணம் பெறுவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பொதுநிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை சட்டவிரோதமானது என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணம் பெறுவதை தற்காலிகமாக இடைநிறுத்தி நேற்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த சுற்றறிக்கை தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்திலேயே டலஸ் அழகப்பெரும இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த சட்டத்திற்கு புறம்பான, சட்டவிரோதமான உத்தரவை தைரியமான எந்தவொரு அரச அதிகாரியும் பின்பற்ற மாட்டார்கள் என்றும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.