ஸ்கொட்லாந்தில் ஒரு தனிப்பட்ட சந்திப்பில், பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் ஆகியோர் சந்தித்துள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) இரவு இன்வெர்னஸில் உள்ள ஒரு ஹோட்டலில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இருவரும் பல விடயங்கள் குறித்து கலந்துரையாடினர்.
குறிப்பாக, தேசிய சுகாதார சேவை, பொருளாதாரம் மற்றும் பாலினத்தை மாற்றுவதை எளிதாக்க கடந்த மாதம் ஸ்கொட்லாந்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குறித்து விவாதித்ததாக அறியப்படுகிறது.
மேலும், தற்போது விவாவதப் பொருளாகியுள்ள ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் குறித்து வலுவான கருத்து பரிமாற்றம் நடந்ததாக கூறப்படுகிறது.
ஸ்கொட்லாந்தில் இரண்டு பசுமைத் துறைமுகங்களை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அரசாங்கங்களின் கூட்டு அறிவிப்பு வெள்ளிக்கிழமை எதிர்பார்க்கப்படுகிறது.
க்ரோமார்டி மற்றும் ஃபோர்த் பிட்ஸ் ஆகிய இரண்டு பகுதிகளிலும் முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் முயற்சியில் வரிச் சலுகைகள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.