சுதந்திர மக்கள் கூட்டணியின் தேசிய நிறைவேற்று சபை இன்று (திங்கட்கிழமை) கூடவுள்ளது.
ஹெலிகாப்டர் சின்னத்தில் அடுத்த தேர்தலில் போட்டியிடும் அந்தக் கூட்டணியில் 12 கட்சிகளும் பல பங்காளி அமைப்புகளும் சேர்ந்துள்ளன.
வேட்புமனு தயாரித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளதாக சுதந்திர மக்கள் கூட்டணியின் செயற்குழு உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்துள்ளார்.