உக்ரைனில் உள்ள ரஷ்ய துருப்புக்களுடன் சேர்ந்து போரிட செர்பிய தன்னார்வலர்கள் பயிற்சி பெறுவதைக் காட்டுவதாகக் வெளிப்படுத்தும் ஒரு ரஷ்ய செய்தி காணொளி செர்பியாவில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கான தனது லட்சியத்தை விட ரஷ்யாவுடனான அதன் நீண்டகால நட்புக்கு செர்பியா முன்னுரிமை அளிப்பதாக விமர்சகர்கள் அடிக்கடி குற்றம் சாட்டுகின்ற நிலையில், இந்த காணொளி வெளியாகியுள்ளது.
போருக்கான ஆட்சேர்ப்பை ஊக்குவிப்பதற்காக செர்பிய மொழியில் வெளியிடப்பட்ட காணொளிகளை தேசிய தொலைக்காட்சியில் செர்பியாவின் ஜனாதிபதி அலெக்சாண்டர் வுசிக் கடுமையாக விமர்சித்தார்.
தங்கள் விதிமுறைகளுக்கு இது எதிரானது என குறிப்பிட்ட அவர் ஏன் செர்பியாவிலிருந்து யாரையும் அழைக்கிறீர்கள் என கேள்வியெழுப்பினார்.
ரஷ்யாவுடனான உறவுகளை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி வுசிக், உக்ரைன் போர் தொடர்பாக செர்பியா நடுநிலை மட்டுமல்ல, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பல மாதங்களாக பேசவில்லை என்றும் கூறினார்.
செர்பியர்கள் வெளிநாடுகளில் நடக்கும் மோதல்களில் பங்கேற்பது சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.