பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) கடனுதவி வழங்குவதற்கான ஆதரவை இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கையின் கடனை மறுகட்டமைப்பு செய்வது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.
கடனுதவிக்கான உறுதிப்பாட்டை கோரியுள்ள சர்வதேச நிதியத்துக்கு தனது உறுதியை ஏற்கெனவே வழங்கியுள்ள இந்தியா, இதுதொடர்பான அதிகாரபூர்வ ஒப்புதலை சர்வதேச நிதியத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நடவடிக்கையும் சர்வதேச நிதியத்துடன் இலங்கை நடத்தி வரும் பேச்சுவார்த்தையும் கடனுதவி ஒப்பந்தத்தை இறுதிசெய்யும் என தான் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.