இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயார் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று இலங்கை வந்த அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார்.
இலங்கைக்கு அத்தியாவசியமான இந்தத் தருணத்தில், மேலும் ஒத்துழைப்பை வழங்க இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.
இதேவேளை, இன்று காலை எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளதுடன், தமிழ்த் தரப்பு அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.