பாலியல் தொல்லை விவகாரம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் முன்னணி மல்யுத்த வீரர்-வீராங்கனைகளின் போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
நேற்று (வியரிக்கிழமை) இரவு மத்திய அமைச்சர் அனுராக்தாகூரின் இல்லத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து இன்றும் போராட்டம் தொடர்கின்றது.
பேச்சுவார்த்தையின் போது இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து பிரிஜ்பூஷன் ஷரன்சிங்கை நீக்க வேண்டும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும், மல்யுத்த சம்மேளனத்தை கூண்டோடு கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வீரர்-வீராங்கனைகள் முன் வைத்திருந்தனர்.
இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க அவகாசம் தேவைப்படும் என்றும் விசாரணை குழுவை அமைக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறியிருந்த போது, உடனடி நடவடிக்கை இல்லாததால், போராட்டத்தை தொடருவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக வீர-வீராங்கனைகள் தெரிவித்தனர்.
இன்று மதியம் மீண்டும் வீரர்-வீராங்கனைகளுடன் அமைச்சர் அனுராக் தாகூர் பேச்சுவார்த்தை நடத்தவுள்டளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் புஷன் ஷரன் சிங் மற்றும் சில பயிற்சியாளர்கள் இளம் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி முன்னணி மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் நேற்று முன்தினம் டெல்லி ஜந்தர்மந்தரில் தர்ணா போராட்டத்தை தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.