உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் கால அவகாசம், இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
கடந்த 18ஆம் திகதி கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பமானதிலிருந்து, பல அரசியல் கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை வைப்புச் செய்துள்ளனர்.
இதனிடையே, 10 அரசியல் கட்சிகள், உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை நேற்று தாக்கல் செய்தன.
இதேவேளை, நாளை நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனுவினை தாக்கல் செய்யும் கால எல்லை நிறைவடையவுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

















