எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கடந்த புதன்கிழமை முதல் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் இன்று (சனிக்கிழமை) நண்பகலுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துள்ளது.
இதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களினால் மாவட்ட மற்றும் பிரதேச செயலக அலுவலகங்களில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தேர்தல் நடத்தப்படும் திகதி இன்று மாலை அறிவிக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.