2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணியை கடந்த 5 ஆம் திகதி ஆரம்பித்துள்ளது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், இலங்கை போக்குவரத்து சபை, தபால் மற்றும் புகையிரத ஊழியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.