அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
மார்ச் 9ஆம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நடைமுறைகள் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இச்சந்திப்பு ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு இதுவாகும்.