வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி நேற்றை விட இன்றும் வீழ்ச்சியை சந்தித்ததுள்ளது.
எவ்வாறாயினும், ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்கிற்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 459.11 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 442.29 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 406.29 ரூபாயாகவும், கொள்வனவு பெறுமதி 390.58 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 371.39 ரூபாயாகவும், கொள்வனவு விலை 360.49 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.