தெற்கு ஸ்பெயினில் உள்ள இரண்டு தேவாலயங்களில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல்களில், ஒருவர் உயிரிழந்ததோடு ஒருவர் காயமடைந்துள்ளார்.
உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, முதலில் அல்ஜிசிராஸில் உள்ள சான் இசிட்ரோ தேவாலயத்திற்குள் புகுந்த தாக்குதல்தாரி பாதிரியாரை கத்தியால் தாக்கி காயப்படுத்தியதாகவும் பின்னர் நியூஸ்ட்ரா செனோரா டி லா பால்மா தேவாலயத்திற்குள் நுழைந்து வெர்ஜரை தாக்கியதில் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நிமிடங்களுக்குப் பிறகு, தாக்குதல்தாரி நிராயுதபாணியாக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக கருதும் புலனாய்வாளர்கள், இதுகுறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த பயங்கரமான தாக்குதலில் இறந்த வெர்ஜரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அல்ஜெசிராஸ் என்பது ஐபீரிய தீபகற்பத்தை மொராக்கோ மற்றும் ஸ்பெயினின் வட ஆபிரிக்கப் பகுதியான சியூட்டாவுடன் இணைக்கும் ஒரு பரபரப்பான படகுத் துறைமுகமாகும்.