• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அடகு வைத்து நகைகளை இழந்த வாடிக்கையார்களுக்கு  விரைவில் தீர்வு – வங்கி அதிகாரிகள் தெரிவிப்பு!

அடகு வைத்து நகைகளை இழந்த வாடிக்கையார்களுக்கு விரைவில் தீர்வு – வங்கி அதிகாரிகள் தெரிவிப்பு!

shagan by shagan
2023/01/27
in இலங்கை
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்கள் வங்கியின் திருநெல்வேலி சேவை நிலையத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை அங்கு பணியாற்றிய அதிகாரி ஒருவர் கையாடிச் சென்றதன் காரணமாகத் தமது நகைகளை மீட்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவில் உரிய தீர்வு பெற்றுத் தரப்படும் என மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் ரி.எம்.டபிள்யூ. சூரியகுமார தெரிவித்துள்ளார்.

அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் வாடிக்கையாளர்களுடனான சந்திப்பின் போதே மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் ரி.எம்.டபிள்யூ. சூரியகுமார இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் வங்கியின் திருநெல்வேலி சேவை நிலையத்தில் அடகு வைக்கப்பட்ட ஒரு தொகுதி நகைகளை அங்கு பணியாற்றிய அதிகாரி ஒருவர் கையாடிச் சென்று விட்டார் என்ற காரணத்தினால், கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அடகு வைக்கப்பட்ட தமது நகைகளை மீட்க முடியாத வாடிக்கையாளர்களுக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை) காலை, 09:30 மணியளவில் கன்னாதிட்டியில் அமைந்துள்ள பிராந்தியத் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் மக்கள் வங்கியின் கிளை வலையமைப்புக்குப் பொறுப்பான பிரதிப் பொது முகாமையாளர் ரி.எம்.டபிள்யூ. சூரியகுமார, பிராந்திய முகாமையாளர், கே.கோடீஸ்வரன், பிராந்திய சட்ட அதிகாரி திருமதி எஸ்.சுகாஸ் மற்றும் பல்கலைக்கழகக் கிளை முகாமையாளர், திருநெல்வேலி கிளை முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் பேசிய பிரதிப் பொது முகாமையாளர் அங்கு மேலும் தெரிவிக்கையில், மக்கள் வங்கிக் கிளை ஒன்றில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் உங்கள் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம்.

இத்தனை வருடங்களாக பொறுமை காத்த உங்களுக்கான நல்ல செய்தி ஒன்றுடனேயே உங்களைச் சந்திக்கிறோம். மிகவும் துன்ப கரமாக நாங்கள் உணர்கிறோம். வங்கியின் அதிகாரிகள் விட்ட தவறுக்காக உங்களைப் பாதிப்படைய விட்டிருக்கக் கூடாது. சில சட்ட நடைமுறைகளின் காரணமாக உங்களுக்கு உடனடியாகத் தீர்வைத் தர முடியாத நிலையில் இருக்கிறோம். ஆனாலும், உங்களுக்கு விரைவாகத் தீர்வைப் பெற்றுத் தருவதற்காக வங்கி சில நகர்வுகளை மேற்கொண்டுள்ளது.

இதுவரை காலமும் நீதவான் நீதிமன்றத்தில் நடாத்தப்பட்டுக்கொண்டிருந்த வழக்கு இப்போது உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் பெப்ருவரி 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

அந்த விசாரணை முடிந்ததும் இயலுமான அளவு விரைவாக வாடிக்கையாளர்களின் நகைகள் விடுவிக்கப்படும், அவ்வாறில்லாமல் தாமதமேற்படுமாயின் வங்கியின் தலைமைக் காரியாலய அதிகாரிகளுடன் பேசி நகைகளுக்கான இன்றைய சந்தைப் பெறுமதியைப் பெற்றுத்தர முயற்சிப்போம் என்று குறிப்பிட்டார்.

இதன் போது கலந்து கொண்ட வாடிக்கையாளர்கள் சார்பில், சம்பவம் இடம்பெற்று இத்தனை வருடங்களாக மக்கள் வங்கி அதிகாரிகள் பாராமுகமாகச் செயற்பட்டதுடன், வாடிக்கையாளர்கள் மீது காட்டமாக நடந்து கொண்ட சம்பவங்கள் குறித்தும் தமது கண்டனத்தையும் வெளிப்படுத்தினர். அத்துடன் ஒவ்வொருவரும் தத்தமது பிரச்சினைகளை வெளிப்படுத்தினர்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற அத்தனை சம்பவங்களுக்கும் வருத்தம் தெரிவித்த வங்கி அதிகாரிகள், தாங்கள் வாடிக்கையாளர்களுக்காகத் தம்மால் இயன்ற நடவடிக்கைகளை எடுப்போம் என்று உறுதியளித்துடன், அடகு நகை மோசடியினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 65 வாடிக்கையாளர்களுக்கும் அவர்களது நகைகளை விரைவில் மீளளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதிப்பாட்டை எழுத்து மூலம் தருவதாகவும் உறுதியளித்தனர்.

இருந்தபோதிலும், வழமை போல காலங் கடத்தப்படாமல், எதிர்வரும் 6 ஆம் திகதி வழக்கு விசாரணைகளின் முன்னேற்றம் பற்றியும், வாடிக்கையாளர்களுக்கான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியும் எதிர்வரும் 10 ஆம் திகதி வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கேட்டனர். வங்கி அதிகாரிகள் அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர்.

இந்த அடகு நகை மோசடி 2012 இல் இடம்பெற்ற போதிலும், இது வரை காலமும் அதிகாரிகள் வாடிக்கையாளர்களுடன் இத்தகைய சந்திப்பு எதனையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கல்லுண்டாயில் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட பிரதான சந்தேக நபர் கைது!

Next Post

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக நுவரெலியா நகர மத்தியில் கறுப்பு பட்டி அணிந்து போராட்டம்!

Related Posts

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

ஜனக பெரேரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் !

2026-06-30
லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!
இலங்கை

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா பிணையில் விடுதலை!

2026-06-30
IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்
இலங்கை

IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

2026-06-30
வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை !
இலங்கை

வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை !

2026-06-30
இலங்கைக்கு தொடரும் IMF ஆதரவு – பொருளாதார முன்னேற்றத்திற்கு பாராட்டு
இலங்கை

இலங்கைக்கு தொடரும் IMF ஆதரவு – பொருளாதார முன்னேற்றத்திற்கு பாராட்டு

2026-06-30
வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோபுதிய கடற்படைத் தளபதியாக நியமனம்!
இலங்கை

வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோபுதிய கடற்படைத் தளபதியாக நியமனம்!

2026-06-30
Next Post
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக நுவரெலியா நகர மத்தியில் கறுப்பு பட்டி அணிந்து போராட்டம்!

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக நுவரெலியா நகர மத்தியில் கறுப்பு பட்டி அணிந்து போராட்டம்!

மின் கட்டணம் 500 வீதத்தால் அதிகரிக்கும் அறிகுறி?

அமைச்சின் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எதிராக குற்றச்சாட்டு!

யாழ். மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 4111 பேர் போட்டி!

யாழ். மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 4111 பேர் போட்டி!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
கோஜெக் இணை நிறுவனர் நதீம் மகரீமுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை – ஊழல் வழக்கில் தீர்ப்பு

கோஜெக் இணை நிறுவனர் நதீம் மகரீமுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை – ஊழல் வழக்கில் தீர்ப்பு

0
அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் சூர்யா?

அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் சூர்யா?

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

ஜனக பெரேரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் !

0
லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா பிணையில் விடுதலை!

0
IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

0
கோஜெக் இணை நிறுவனர் நதீம் மகரீமுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை – ஊழல் வழக்கில் தீர்ப்பு

கோஜெக் இணை நிறுவனர் நதீம் மகரீமுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை – ஊழல் வழக்கில் தீர்ப்பு

2026-06-30
அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் சூர்யா?

அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் சூர்யா?

2026-06-30
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

ஜனக பெரேரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் !

2026-06-30
லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா பிணையில் விடுதலை!

2026-06-30
IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

IMF தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்

2026-06-30

Recent News

கோஜெக் இணை நிறுவனர் நதீம் மகரீமுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை – ஊழல் வழக்கில் தீர்ப்பு

கோஜெக் இணை நிறுவனர் நதீம் மகரீமுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை – ஊழல் வழக்கில் தீர்ப்பு

2026-06-30
அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் சூர்யா?

அரசியலில் களமிறங்குகிறாரா நடிகர் சூர்யா?

2026-06-30
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

ஜனக பெரேரா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் !

2026-06-30
லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா பிணையில் விடுதலை!

2026-06-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.